Categories
திருநெல்வேலி தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லையில் 32 பேர், தென்காசியில் 2 பேருக்கு இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி!!

இன்று நெல்லை மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கும், தென்காசியில் புதிதாக 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மே 31ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. மேலும் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து மருத்துவக் குழு நிபுணர்களோடு எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இருப்பினும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பாடில்லை.

தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 11,125 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,731 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். மேலும் மாநிலத்தில் இன்று மட்டும் 7 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று நெல்லையில் 32 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நெல்லையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளது.நேற்றுவரை நெல்லையில் 297 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 99 பேர் குணமடைந்த நிலையில் 197 பேர் சிகிச்சையில் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, தென்காசியில் இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், பாதிப்புகளின் எண்ணிக்கை 87 ஆக அதிகாத்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 52 பேர் குணமடைந்த நிலையில், தற்போது சிகிச்சையில் 35 பேர் உள்ளனர்.

Categories

Tech |