ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு கல்வி நிறுவனத்தில் தற்கொலை படை பயங்கரவாதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் 32 நபர்கள் பரிதாபமாக உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தஷ்ட்-இ-பார்ச்சி என்னும் நகரில் இயங்கி வரும் கல்வி நிறுவனத்திற்குள் தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் திடீரென்று புகுந்துள்ளார். அதனை தொடர்ந்து தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை அவர் வெடிக்க செய்ததில் பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது.
இதில் 32 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி பலியாகினர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தார்கள். அதனைத்தொடர்ந்து தலிபான்கள் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் காயம் ஏற்பட்ட ஒரு மாணவர் தெரிவித்ததாவது, வகுப்பறையில் மாணவ மாணவிகள் 600 பேர் இருந்தோம். இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில், உயிரிழவர்களில் அதிகமானோர் மாணவிகள் தான் என்று கூறியிருக்கிறார்.