அமெரிக்காவில் தற்போது வரை சுமார் 32.4 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் அமெரிக்காவில் தான் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது. எனவே ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். அதன்படி அங்கு பைசர்/பயோஎன்டெக், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
சுமார் 32,44, 14, 371 தடுப்பூசிகள் தற்போது வரை செலுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதில் தடுப்பூசியின் முதல் டோஸ், சுமார் 17,96,15,165 நபர்கள் செலுத்தியுள்ளனர். மேலும் 15,37,76,118 நபர்கள் இரண்டு டோஸ்களும் செலுத்தியிருப்பதாக அமெரிக்காவின் சுகாதார துறை தெரிவித்திருக்கிறது.