இதுவரை சுமார் 32.1 கோடி கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக உலக அளவில் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போதைய அதிபரான ஜோ பைடன் தலைமையிலான அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
அத்துடன் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அமெரிக்காவில் பைசர், பையோஎன்டெக் , மாடர்னா,மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மட்டுமே மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை சுமார் 32,11,99,379 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து 17,84,91,147 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 15,16,15,554 பேர் 2 வது டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.