உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் நடைபெற உள்ள 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.
இந்த ஒலிம்பிக் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதையடுத்து பிரதமர் மோடி பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய அனைவரையும் பாராட்டுவதாகவும், மற்ற விளையாட்டு வீரர்களின் பங்களிப்பு மற்றும் முயற்சியை பெருமிதம் கொள்வதாகவும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் நம்முடைய குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.