Categories
மாநில செய்திகள்

32 சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தப்படும்…. அமைச்சர் எ.வ வேலு தகவல்…!!!

தமிழகம் முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 606 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இதில் 5,134 கிலோமீட்டர் சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. மீதமுள்ளவை மத்திய அரசின் நிதியில் மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பதற்காக நாற்பத்தி ஒன்பது இடங்களில் சுங்க சாவடிகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சாலைகளின் நீளத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் 46 சுங்கச்சாவடிகள் இருக்கிறது. எனவே கூடுதலாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |