Categories
உலக செய்திகள்

“31 வது சுதந்திர வாழ்த்து”…. பிரபல நாடு உக்ரைனின் வாழ்நாள் முழுக்க நண்பனாக இருக்கும்…. தகவல் வெளியிட்ட ரிஷி சுனக்….!!

உக்ரைனின் வாழ்நாள் நண்பனாக இங்கிலாந்து இருக்கும் என அந்நாட்டு பிரதமர் வேட்பாளரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதிமந்திரியுமான ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாடு சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து இன்றுடன் 31 ஆண்டுகள் நிறைவடைகின்றது. அந்தவகையில் உக்ரைன் இன்று 31 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றது. இந்நிலையில், உக்ரைனுக்கு சுதந்திர நாள் வாழ்த்து தெரிவித்து இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதில் ரிஷி சுனக் கூறியதாவது, “உக்ரைனின் உறுதியான மன தைரியத்தை பாராட்ட வேண்டும். இங்கிலாந்து உக்ரைனின் வாழ்நாள் முழுக்க நண்பனாக இருக்கும் என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன். இரு நாடுகளுக்கு இடையிலான கலாசாரம், வணிக உறவு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பது நம்மை மேலும் வளப்படுத்தும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரஷ்யா – உக்ரைன் மீது போர் தொடுத்து இன்றுடன் ஆறு மாதங்கள் நிறைவுறுவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |