தமிழகத்தில் 30 நாட்களுக்குப் பிறகு வந்த சோதனையால் பொது மக்கள் வேதனையில் உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஆகஸ்டு 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, இம்மாதத்தின்(ஆகஸ்ட் ) முதல் இரண்டு வாரங்களில், பாதிப்பு சீராக கட்டுப்படுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 30 நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 6,000த்தை தாண்டியது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் 6,352 பேருக்கு பாதிப்பு உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இன்று ஒரே நாளில் 87 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 7,130ஆக அதிகரித்துள்ளது.