Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு சந்தேகமா இருந்துச்சு… முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த வாலிபர்… விசாரணையில் தெரியவந்த உண்மை…!!

சூப்பர் மார்க்கெட்டில் 3,00,000 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எஸ்.பி.ரோடு பகுதியில் சூப்பர் மார்க்கெட் அமைந்திருக்கிறது. இந்நிலையில் அந்த சூப்பர் மார்க்கெட்டின் பின்புறத்தில் இருக்கும் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று கல்லாவில் வைத்திருந்த 3,00,000 ரூபாய் திருடி தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து சூப்பர் மார்க்கெட்டின் நிர்வாகியான நரசிம்மன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி திருடு நடந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கே தடயங்களை சேகரித்து உள்ளனர். அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த  சி.சி.டிவி கேமராவில் பதிவாகி உள்ள வீடியோவை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை ஒருவரை பிடித்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறிய காரணத்தால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் அவர் முகமது அலி என்பதும் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து சூப்பர் மார்க்கெட் ஜன்னலை உடைத்து 3,00,000 ரூபாயை திருடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் முகமது அலியை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 50,000 ரூபாயை பறிமுதல் செய்து இந்த திருட்டில் தொடர்புடைய மற்ற 2 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |