Categories
தேசிய செய்திகள்

தாஜ்மஹாலை சுற்றியுள்ள 3000 கடைகள்….. கோர்ட்டு உத்தரவால் அதிரடி நோட்டீஸ்….. கவலையில் வியாபாரிகள்….!!!!!

உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் இருக்கிறது. தாஜ்மஹாலை முகலாய மன்னர் ஷாஜகான் தன்னுடைய மனைவி மும்தாஜின் நினைவாக கட்டியுள்ளார். இந்த தாஜ்மஹால் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. ‌ இங்கு தினந்தோறும் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள்.

கடந்த டிசம்பர் மாதம் டெல்லி உச்சநீதிமன்றம் தாஜ்மஹாலை சுற்றி 500 கிலோ மீட்டர் தொலைவிற்கு எந்த ஒரு கடையும் செயல்படக் கூடாது என உத்தரவிட்டது. இதன் காரணமாக 3,000 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கடைகளை அகற்றுவதற்கு 3 மாதங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, உரிய காலத்திற்குள் கடைகளை காலி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் வியாபாரிகள் கவலையில் இருக்கின்றனர்.

Categories

Tech |