Categories
தேசிய செய்திகள்

300 யூனிட் இலவச மின்சாரம்….. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மான் ஒவ்வொரு வீடுகளுக்கு ஜூலை மாதம் முதல் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அம் மாநிலத்தின் முதல்வராக பகவந்த் சிங் மான் உள்ளார். தேர்தலுக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் அம்மாநில அரசு வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற தொடங்கியுள்ளது. அதன்படி தற்போது ஒவ்வொரு வீடுகளுக்கும் வரும் ஜூலை மாதம் முதல் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை நிறைவேற்றி இருக்கும் சூழலில், அடுத்த அதிரடி அறிவிப்பை முதல்-அமைச்சர் பகவந்த் சிங் மான் வெளியிட்டுள்ளது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாபில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வெற்றி நடை போடுவதாக அக்கட்சியினர் பெருமிதத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |