முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஏழைகளுக்கு இலவச வீடு போன்ற பல திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
நவரத்தினங்கள் என்னும் ஒன்பது முக்கிய திட்டங்களை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் வாக்குறுதியாக வழங்கியுள்ளார் .ஏழைகளுக்கு வீடு, இலவச மருத்துவம், கல்வி, விவசாய கடன், வேலைவாய்ப்பு, பூரண மதுவிலக்கு போன்ற திட்டங்கள் இதில் அடங்கும் .ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பொறுப்பேற்று நாளிலிருந்து தனது வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றியுள்ளார். அந்த வகையில் தனது வாழ்வின் ஒரு பகுதியாக பிள்ளைகளுக்கு பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்கள் வங்கி கணக்கில் 15,000 செலுத்தப்படுகிறது.
விண்ணப்பித்த 90 நாட்களுக்குள் பெண்கள் பெயரிலேயே இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட வேண்டும் என்று ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதால் ஏழைகள் அனைவரும் தற்போது இரவு பட்டா பெற்று வருகின்றனர். இது மட்டுமில்லாமல் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பத்தாயிரம், தள்ளுவண்டி வைத்திருப்பவர்களுக்கு 10,000 அவரது வங்கி கணக்கில் போடப்படும் என்று கூறியுள்ளார்.
நேற்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றபோது நகர்ப்புறங்களில் வசிக்கும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு டிட்கோ நிறுவனம் மூலம் அரசு இலவச வீடுகளை கட்டித் தருவதும் என்றும், 300 சதுரடி இருக்கும் வீடுகளை ஏழைகளுக்கு ஒரு ரூபாய்க்கு வழங்குவது என பல முக்கிய தீர்மானங்களை கொண்டு வந்துள்ளார்.