செங்குன்றத்தில் மாதச் சீட்டு நடத்தி 4 கோடி ரூபாய் மோசடி செய்த கணவனும் மனைவியும் தலைமறைவாகினர்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்திலுள்ள நல்லூர் ஊராட்சி ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்த்த ராமச்சந்திரன்- பஞ்ச வர்ண செல்வி தம்பதியினர். இருவரும் மாத சீட்டு நடத்தினர். அவர்களிடம் 300-க்கும் மேற்ப்பட்டோர் மாதச் சீட்டு செலுத்தினர். ஆனால் மாதச்சீட்டு செலுத்தியவர்களுக்கு பணம் கொடுக்காமல் 4 கோடி ஏமாற்றி இருவரும் தலைமறைவாகினர். அவர்கள் வீட்டில் இல்லை என்பதை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஆவடியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் சோழவரம் காவல் துறையினருக்கு விசாரிக்க உத்தரவிட்டனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் மதுரை கோர்ட்டில் பஞ்சவர்ண செல்வி ஆஜர் ஆகினார். அவரை அழைத்து வந்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.