Categories
சென்னை மாநில செய்திகள்

30 பெண்கள்…. 150சவரன்…. அசால்ட்டாக ஏமாற்றிய 24 வயது போலி சாமியார்…!!

சென்னையில் 24 வயதான போலி சாமியார் 30 பெண்களிடம் 150 சவரன் நகையை ஏமாற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 400 குடும்பங்களுக்கு மேல் உள்ள ஒரு பகுதியில் 30 க்கும் மேற்பட்ட பெண்களை நூதனமாக ஏமாற்றி 150 சவரன் நகைகளை கொள்ளையடித்த 24 வயதான போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். சென்னை பொண்ணு வேலுப்பிள்ளை தோட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பூசாரி ஆனந்த். இந்த கோவிலுக்கு அருகே தாய் , தந்தையுடன் வசித்து வரும் 24 வயதான ஆனந்த் கோவிலுக்கு வரும் பெண்கள் தங்களது குறைகளை அம்மனிடம் சொல்லும் போது நன்கு கேட்டறிந்து உள்ளார்.

பின்னர் அதற்கு தீர்வு சொல்வது போல பெண்களிடம் நகை மற்றும் பணம் பறிப்பதற்கு திட்டம் தீட்டியுள்ளார்.இந்த நிலையில் திருமணம் ஆகாமல் இருக்கும் , திருமணமாகி குழந்தை இல்லாமல் இருக்கும் பெண்கள் , நோயுற்றவர்கள் வீடுகளை குறி வைத்துள்ளார் அந்த போலி சாமியார். இவர் வீடுகளில் பரிகார பூஜை செய்தால் பிரச்சனை சரியாகும் என்று சொல்லி பணம் மற்றும் நகைகளை பறிக்க முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தேங்காய் , சூடம் , வெற்றிலை , பாக்கு அடங்கிய கலசத்தை கொடுத்து வீட்டில் உள்ள நகைகளை கலசத்தில் போட்ட சொல்லியுள்ளார் சாமியார் ஆனந்த். பின்னர் தாம் பூஜை செய்யும் நேரம் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்றும் ,  ஒரு வேளை பூஜை செய்யும் நேரத்தில் கண்ணை திறந்தால் பூஜை பலிக்காது எனவும் கூறியுள்ளார். மேலும் வீட்டில் கெட்ட காரியம் நடக்கும் எனவும் பெண்களை பயமுறுத்தி உள்ளார்.

சாமியார் ஆனந்த் பூஜை நடக்கும் போது பெண்கள் கண்ணை மூடிக் கொண்டிருந்த சமயத்தில் கலசத்தில் அவர்கள் வைத்திருந்த தங்க நகைகளை திருடி விட்டு அந்த கலசத்தை சுற்றி மந்திர கயிறுகள் கட்டி பெண்களிடம் கொடுத்துள்ளார்.மேலும் இந்த கலசத்தை எக்காரணம் கொண்டும் 21 நாட்கள் திறக்கக் கூடாது எனவும் , பத்திரமாக வைத்திருக்க வேண்டும் எனவும் பெண்களிடம் சாமியார் சொல்லியதை பெண்களும் பின்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் 21 நாட்களுக்கு பிறகு அதாவது , விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாளிலிருந்து ஒவ்வொரு பெண்களும் தங்களது வீட்டிலிருந்த கலசத்தை திறந்து பார்த்தனர்.அதில் தங்க நகைகள் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து சாமியாரிடம் கேட்ட போது தங்களது நகைகளை பத்திரமாக பூஜை செய்து வைத்துள்ளதாகவும் , தங்களது குறைகள் நீங்கும் போது அதை திருப்பி தந்து விடுவேன் எனவும் கூறி மீண்டும் அப்பகுதி பெண்களை நம்ப வைத்துள்ளான்.

இதேபோல் அப்பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பெண்களிடம் சுமார் 150 சவரன் நகை களுக்கு மேல் மோசடி செய்ததாக ஏமாந்த பெண்களுக்கு தெரியவந்ததையடுத்து வெள்ளிக்கிழமை இரவு ஏமாற்றப்பட்ட பெண்கள் ஒன்று கூடி சாமியார் ஆனந்த வீட்டுக்கு சென்று அதை கேட்டு தகராறு செய்துள்ளனர். பெண்கள் சாமியார் வீட்டு முன்பு குவிந்த தகவல் அறிந்த அமைந்தகரை போலீசார் சாமியாரை பிடித்து விசாரித்தனர்.

இதையடுத்து பெண்களை ஏமாற்றி நகைகளை பறித்ததை சாமியார் ஒப்புக்கொண்டார்.  பின்னர் சாமியார் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் நகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.நகைகளை எங்கு வைத்துள்ளார் ? அடகு வைத்து உள்ளாரா ? அல்லது வேறு என்ன செய்தார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். போலி சாம்பியன் 30 பெண்களின் ஏமாற்றி நகையை ஆட்டைய போட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |