பெண் ஒருவர் காணாமல் போன நிலையில் 30 வருடங்கள் கழித்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார் விபத்து ஒன்றில் சுயநினைவை இழந்ததால் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் தற்போது அவரின் பிள்ளைகள் காவல் துறையினரின் உதவியுடன் அவரை கண்டுபிடித்துள்ளனர். 1991 ஆம் வருடத்தில் பிரிட்டனின் தென்மேற்கு நகரத்திலிருந்து சைப்ரஸ் நாட்டிற்கு குடி பெயர்ந்துள்ள லீட்ரேஸி மைலி என்ற பெண் அப்போதி காணாமல் போயுள்ளார். இருப்பினும் கடந்த வருடம் தான் அவரது மகன் கிரேக் மிலே அவர் காணாமல் போனதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் தற்போது அவரை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியுள்ளதாவது, லீ-ட்ரெஸி கடந்த 1991 ஆம் வருடத்தில் பிரிட்டனை விட்டு வெளியேறி எகிப்திற்கு சென்றுள்ளார். அதன்பின் சைப்ரஸ் நாட்டுக்கு சென்றுள்ள அவர் சாலை விபத்து ஒன்றில் சிக்கி கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதனால் அவருக்கு அதற்கு முன்பு தன் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது நினைவில் இல்லை. இதனால் அவர் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்துள்ளார். அப்போது அவர் தன் குடும்பத்தினரை கண்டுபிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது குடும்பத்தினரும் பல இடங்களுக்கு இடம்பெயர்ந்ததால் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து அவரது பிள்ளைகளும் பல இடங்களில் தாயை கண்டுபிடிக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தான் லீ-ட்ரெஸி காணவில்லை என்பதை அவரது மகன் அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பிரிட்டன் காவல்துறையினர் முக்கிய குற்றபிரிவு விசாரணைக் குழுவில் துப்பறியும் நபர்கள் தலைமையில் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதன்படி 2003 ஆம் வருடத்தில் லண்டனில் அவர் வசித்திருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இருப்பினும் கண்டுபிடிக்கப்பட்ட முகவரியில் அவர் இல்லை. மேலும் அவர் பாஸ்போர்ட் ஏதேனும் பெற்றுள்ளாரா என்ற கோணத்தில் விசாரித்து வந்துள்ளனர். அப்போது 2003 ஆம் வருடத்தில் மே மாதம் பாஸ்போர்ட் வாங்கியுள்ளார் என்பதும் மேலும் அவர் 2004 மே 12-ஆம் தேதி அன்று அமெரிக்காவிற்கு சென்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 2013 ல் அந்த பாஸ்போர்ட் காலாவதி ஆகியுள்ளது. அதனை அவர் புதுப்பிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
அதன்பின்பு அவர் அரிசினோ என்ற இடத்தில் வசிப்பதாக உள்ளூர் காவல் துறையினர் மூலம் கிடைத்த தகவலின் படி அவர் வசிக்கும் முகவரியை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து 2020 ஆம் வருடம் அக்டோபர் 30ஆம் தேதியன்று லீ-ட்ரெஸியின் மகன் கிரேக் மைலிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முப்பது வருடங்களுக்கு முன்பு பிரிந்த குடும்பம் தற்போது ஒன்று சேர்ந்துள்ளனர். மேலும் லீ-டிரேஸிக்கு மகள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர். மேலும் இந்தக் கடுமையான கொரோனா காலங்களிலும் வழக்கை கைவிடாமல் தொடர்ந்து போராடி தன் தாயை மீட்டு தந்துள்ள காவல்துறையினருக்கு அவரது மகன் கிரேக் மைலி நன்றி கூறி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.