Categories
மாநில செய்திகள்

“30% போனஸ்” அரசு டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்….. ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்….!!!!

கோவில்பட்டியில் உள்ள ஆனந்தா விடுதியில் தமிழக அரசு‌ டாஸ்மாக் சங்க ஊழியர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலத் துணைத் தலைவர் மரகத லிங்கம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் சரவணன் கலந்து கொண்டார். வருகிற 27-ம் தேதி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் சங்க ஊழியர்கள் போராட்டம் நடத்த இருக்கின்றனர். இந்த போராட்டத்தில் மதுரை மண்டலம் சார்பில் 500 பேர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதாவது 2021 மற்றும் 22-ம் ஆண்டுக்கான போனஸ் 30 சதவீதம் வழங்க வேண்டும். 480 நாட்கள் பணி புரிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்க சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கடந்த 10 வருடங்களாக தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக கூறியுள்ளார்.

அந்த வாக்குறுதியின் படி மதுபான கடைகளில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கடந்த 19 வருடங்களாக தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதோடு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |