Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

30 நிமிடத்தில் பறந்து விடும்… சளி, இருமல், மூச்சுத்திணறல் சரியாக டிப்ஸ்..!!

30 நிமிடத்தில் சளி, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் சரியாக எளிய முறையில் டிப்ஸ் உள்ளது.

ஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி செய்யும் வேலைகளுக்கு இடையூறாகவும் இருக்கிறது. அப்பொழுது முறையான சிகிச்சை அளிக்காவிடில் தொடர் பிரச்னையாகவும் ஆகக்கூடும். அதற்கு சின்ன சின்ன எளிய வழிகளில்  நமக்கு கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு சுலபமாக சரி செய்யலாம். அதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம் .

*ஆடாதொடை இலைதுளிர்களை எடுத்து நீரில் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் சேர்த்து பருகிவந்தால் நெஞ்சு சளி கரையும்.

*வைட்டமின் சி நெஞ்சுசளியை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.

*நெஞ்சு சளி இருக்கும் நேரத்தில் இந்த ஆரஞ்சு பழத்தையும் எலுமிச்சை பழத்தையும் அடிக்கடி எடுத்துக் கொண்டால் நெஞ்சு சளி குறையும்.

*மிளகைத் தூளாக்கி வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட சளித்தொல்லை பறந்தே போய்விடும்.

*அதே போல மிளகுப் பொடியை ஒரு காட்டன் துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல் எல்லாம் பறந்தே போய்விடும்.

*வெற்றிலை சாறு, இஞ்சி சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து குடித்து வந்தால் மார்பு சளி சுவாச கோளாறுகள் குணமாகும்.

*தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும். அதேமாதிரி மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் செய்து சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கவே பிடிக்காது.

*சின்ன வெங்காய சாறு 20 மில்லி, தேன் 20 மில்லி, இஞ்சிச்சாறு 20 மில்லி இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒரு வேளை வீதம் தொடர்ந்து இரண்டு தினங்கள் உணவுக்கு முன் பருகிவந்தால் சிறந்த பலனை தரும்.

*நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுக தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இருமல், சளி சரியாக போய்விடும்.

*ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி பால் ,சர்க்கரை சேர்த்துக் காலை மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

 

Categories

Tech |