Categories
அரசியல் மாநில செய்திகள்

30 நாட்களில் முதலமைச்சராவது எப்படி…? ரஜினியை விமர்சித்த சீமான்…!!!

தமிழகத்தில் 30 நாட்கள் முதலமைச்சராவது எப்படி என்று ரஜினியிடம் இருந்து தான் கற்க வேண்டும் என சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாத தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரம் தீவிரம் காட்டி வருகிறது. இதனையடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று குழப்பத்தில் இருந்த நிலையில், நான் அரசியலுக்கு வருவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன. மேலும் கட்சி தொடங்குவது தெரிவிக்கப்பட்டதை அடுத்து அடுத்த கட்ட பணிகளை ரஜினி தொடங்கியுள்ளார்.

அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் ரஜினியை விமர்சித்து சீமான் கூறுகையில், “முப்பதே நாட்களில் முதலமைச்சர் ஆவது எப்படி என்று ரஜினியிடம் இருந்து தான் கற்க வேண்டும். இத்தனை ஆண்டுகளில் ரசிகர் மன்றத்தை நிர்வகித்த நிர்வாகிகளில், செயல்பாட்டாளர்களில் ஒருவர் கூடவா உங்கள் கட்சியை ஒருங்கிணைத்து வழி நடத்த தகுதி பெறவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |