Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

30வருஷம் பாஜக ஆட்சி…! உடனே இதை செய்யுங்க …. முதல்வர் சொன்ன சீக்ரெட்… அம்பலப்படுத்திய திருமாவளவன் …!!

திரிபுரா மாநிலத்தில் பாஜக நடத்திய வன்முறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்.பி திருமாவளவன், திரிபுராவில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து எண்ணற்ற பல வன்முறைகள். முதலில் இடதுசாரிகள் குறிவைத்து தாக்கப்பட்டார்கள், லெனின் சிலை தகர்க்கப்பட்டது, நாடு அமைதியாக இருந்தது. இவையெல்லாம் மிக மோசமான ஒரு கலாச்சாரம். ஆட்சிமாற்றம் ஏற்படுகின்ற போது அதிகாரத்தில் இருப்பவர்கள் கடந்த காலத்திலிருந்த ஆட்சியாளர்களின் அடையாளங்களை எல்லாம் அழித்து, ஒழிப்பது என்கின்ற முறையில் களமிறங்கினால் என்னவாகும்.

யோசித்துப் பாருங்கள். அவை ஜனநாயகத்திற்கு புறம்பானதில்லையா ? ஜனநாயக நெறிமுறைகளை குழி தோண்டிப் புதைக்கின்ற கேவலமான செயல் இல்லையா? என விமர்சித்தார். 35 ஆண்டு காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த மண்ணில் ஆண்டு கொண்டிருக்கின்ற நிலையில் அவர்களின் அடையாளங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். அதை சகித்துக் கொள்வதற்குரிய பெருந்தன்மை மதவெறி கும்பல் இடம் இல்லை.

திரும்புகின்ற திசையெல்லாம் ஸ்டாலின் படம். இப்போது இருக்கிற முதல்வர் சொல்கிறார். பிப்ளப் குமார் தேவே அவருடைய பெயர் முதலமைச்சர்…. அவர் சொல்கிறார் நாம் தொடர்ந்து 30 வருடமாக ஆட்சியில் இருக்க வேண்டும் என்றால் ஒன்றே ஒன்று செய்யுங்கள். வீட்டுக்கு வீடு விவேகானந்தர் படத்தை வையுங்கள். நாம் 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறோம் என்றார். அதை சொல்லிவிட்டு என்ன சொல்கிறார் என்றால் எந்தப்பக்கம் திரும்பினாலும் எந்த வீட்டைப் பார்த்தாலும் ஜோசப் ஸ்டாலின் படம் இருக்கின்றன, ஜோதிபாசு படம் இருக்கின்றன.

நிரூபன் சக்கரவர்த்தி படங்கள் இருக்கின்றன,அந்த மண்ணின் மைந்தர்களின் பூர்வீக குடிகளின் இல்லங்கள் தோறும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் படம் இருக்கிற வரையில் நம்மால் ஆட்சிக்கு வர முடியாது. வந்தாலும் அதை தக்க வைத்துக் கொள்ள முடியாது. தொடர்ந்து நீடிக்க முடியாது. எனவே குறைவாக பேசுங்கள், பொறுமையாக இருங்கள், வீட்டுக்கு வீடு விவேகானந்தர் படத்தை வையுங்கள். மதம் என்பதை எப்படி வீட்டில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்கு அவர்கள் முன்மொழிய கூடிய யுக்தி இது என விமர்சித்தார்.

Categories

Tech |