Categories
உலக செய்திகள்

30ஆம் தேதி… 30 நொடிகளில் மொத்த சேமிப்பும் போய் விட்டது… வங்கிக்கு வெளியே கதறிய முதியவர்..!!

வங்கியில் இருந்து தனது மொத்த சேமிப்பான 2 லட்சம் டாலரை எடுத்து விட்டு வெளியில் வந்து 30 வினாடிகளில் திருடனிடம் பறி கொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஃபிரான்சிஸ்கோ என்பவர் ஜூன் மாதம் முப்பதாம் தேதி தன் வங்கியில் சேர்த்து வைத்த தனது மொத்த சேமிப்பையும் எடுத்துக் கொண்டு வெளியில் வந்த 30 நொடிகளில் திருடனிடம் பறி கொடுத்துள்ளார். சம்பவத்தன்று வங்கியிலிருந்து பணத்தை எடுத்து விட்டு ஃபிரான்சிஸ்கோ வெளியில் வந்து காரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அச்சமயம் திடீரென வந்த மர்ம நபர் ஃபிரான்சிஸ்கோவை  தள்ளிவிட்டு அவரிடம் இருந்த இரண்டு லட்சம் டாலரை பறித்துவிட்டு மாயமாகியுள்ளார்.

மர்மநபர் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த ஃபிரான்சிஸ்கோவுக்கு தோள்பட்டை விளக்கியதுடன் காயங்களும் ஏற்பட்டது. தற்போது இருக்கும் சூழலில் உறவினர் ஒருவரின் மருத்துவ செலவுக்காகவும் கல்விக் கட்டணங்களுகாகவும் சேமித்து வைத்த மொத்தத் தொகையும் தேவைப்படும் நிலையில் மர்மநபரிடம் பறி கொடுத்துள்ளார் ஃபிரான்சிஸ்கோ. இத்தகைய நிலையில் ஃபிரான்சிஸ்கோவின் குடும்பம் பொதுமக்களின் உதவியை கேட்டுள்ளனர்.

அவரது மகன் கூறுகையில், “இத்தகைய கொடூரமான தாக்குதலை நிச்சயம் எனது தந்தை எதிர்பார்த்திருக்கவில்லை. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் முடிந்தளவு திருடனுடன் எனது தந்தை போராடினார் என்று தெரிவித்துள்ளனர்” எனக் கூறினார். இவ்வளவு பெரிய தொகையை வங்கியில் இருந்து எடுக்கப் போவதாக ஃபிரான்சிஸ்கோ யாரிடமும் கூறவில்லை இருந்தும் எதிர்பாராமல் நடந்த தாக்குதலால் எவரொ ஒருவர் ஃபிரான்சிஸ்கோவை கண்காணித்து வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் மர்ம நபரை கைது செய்ய பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |