மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை இறந்த விவகாரத்தில் 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளார்.
நேற்று மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியது . இது தொடர்பாக ஆர்கே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் நடத்திய விசாரணையில் அந்த மாஞ்சா நூல் காமராஜர் பகுதியில் இருந்து பறந்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நாகராஜ் என்பவரையும் , 15 வயது சிறுவன் ஒருவனையும் காவல்துறையினர் கைது செய்கிறார்கள். 2 பேரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 2015ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் இது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.இந்த சம்பவம் தொடர்பாக நேற்று இரவு முழுவதும் வடசென்னை பகுதியில் காவல்துறை சோதனை நடத்தினர். இதில் காசிமேடு பகுதியில் காற்றாடி விட்ட ஒருவரை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டார்கள்.
இதுமட்டுமல்லாமல் மாஞ்சா நூல் பறக்கவிடப்பட்ட அந்த இடத்தில் இருக்கக் கூடிய சிசிடிவி காட்சிகளை காவல்துறை கைப்பற்றி அதையும் ஆய்வு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.