Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முதியவரை தாக்கிய தந்தை…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை….!!

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் தந்தை முதியவரை தாக்கியுள்ளார். இதனால் அந்த முதியவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நெல்லை மாவட்ட காவல்துறையினர் அந்த முதியவரை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து அந்த முதியவர் தனது உடலில் காயம் ஏற்பட்டதாக கூறியதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த 3 வயது சிறுமியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Categories

Tech |