Categories
கிரிக்கெட் விளையாட்டு

3வது ஒருநாள் போட்டியில்…இந்தியா 329 ரன்கள் குவிப்பு …தொடரை கைப்பற்றுமா இந்தியா …!!!

கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 330 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையில் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி ,புனேவில் நடைபெற்று வருகிறது.  இரு அணிகளும் இதற்கு முந்தைய ஆட்டங்களில், 1-1 என்ற கணக்கில் வெற்றியை சமநிலையில் வைத்துள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில், முதலில் இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 48.2 ஓவர்களில் 329 ரன்களை எடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 78 ரன்களை அடித்து விளாசினார்.

இதையடுத்து ஷிகர் தவான் (67) ரன்கள்  ,ஹர்திக் பாண்டியா(64) ரன்கள், ரோகித் சர்மா (37) ரன்கள் மற்றும் ஷர்துல் தாகூர் (30) ரன்கள்   எடுத்து,  இந்திய அணிக்கு ரன்களை   குவித்தனர்.
இதன்பின் பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 330 ரன்களை இலக்காக கொண்டு விளையாடுகிறது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய் 14 ரன்களிலும் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஒரு ரன்னிலும் வெளியேறினார்கள். இந்திய அணியின் புவனேஷ் குமார் இந்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

Categories

Tech |