Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின், சோர்பூர், பூஞ்ச, புல்வாமா உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் தீவிரவாத ஊடுருவல் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகின்றன. கடந்த முறை நடந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 2 ராணுவப்படை வீரர்கள் மரணமடைந்தனர். இந்த நிலையில், இன்று புல்வாமா பகுதியில் பயங்கரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, இருதரப்பினர் இடையே துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. அதில் 2 பயங்கரவாதிகள் உட்பட அவர்களுக்கு உதவி செய்த ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டான். இது ஒருபுறம் இருக்க காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்திரும் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிறிய ரக பீரங்கிகள் மூலம் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக பொதுமக்கள் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் உதாம்பூர் நகரில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |