Categories
மாநில செய்திகள்

வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்களை மீட்கும் பணியை கண்காணிக்க 3 சிறப்பு அதிகாரிகள் குழு நியமனம்!

வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்களை மீட்கும் பணியை கண்காணிக்க 3 சிறப்பு அதிகாரிகள் குழு நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் திரும்ப வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தமிழகத்திற்கு மட்டும் 4 விமான சேவைகள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் திரும்ப சுமார் 50,000 வெளிநாடு வாழ் தமிழர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் முதற்கட்டமாக நாளை மறுதினம் மலேசியாவில் இருந்து சுமார் 200 பேர் தமிழகம் அழைத்துவரப்பட உள்ளதாக தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. இதேபோல வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா தாக்கத்தால் வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்களை தொடர்பு கொள்ள இ-பாஸ் வழங்குவதை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில் பின்கி ஜோவல், ஆனந்தகுமார், சாந்தகுமார் ஆகியோரை நியமித்து அரசாணை வெளியிட்டது. தமிழக அரசு கட்டுப்பாட்டு அறை அமைத்து அதற்கான சிறப்பு அதிகாரியாக ஊரக வளர்ச்சித்துறை சிறப்பு செயலாளர் பின்கி ஜோவல் ஐஏஎஸ், தமிழ்நாடு கேபிள் டிவி பொது மேலாளர் ஆனந்தகுமார், தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் பொது மேலாளர் சாந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |