Categories
உலக செய்திகள்

மூன்றாவது கொரோனா அலையில் இருந்து தப்பித்தோம்…. எப்படி சாத்தியமானது….? விளக்கமளிக்கிறார் டாக்டர் சாரா….!!

மூன்றாவது கொரோனா அலையை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து மொன்றியல் பொது சுகாதார துறையின் டாக்டர் சாரா அவர்கள் தெரிவித்துள்ளார்.

கனடாவில் மொன்றியல் நகரத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை வெற்றிகரமாக தவிர்க்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து மொன்றியல் பொது சுகாதாரத் துறையை சேர்ந்த டாக்டர் சாராவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது “உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கியூபாவில் கண்டறியப்பட்டது.

மேலும் அது வேகமாக பரவக்கூடியது என்பதை நாங்கள் ஆய்வின் மூலம் அறிந்தோம். இதனை அடுத்து கொரோனா தொற்று உடையவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் விரைவில் கண்டறிதல், விரைவாக ஆய்வக முடிவுகளை தரும் திடீர் மாற்றம் பெற்ற வைரஸ்களை கண்டறிதல், பள்ளிகளையும் அலுவலகங்களையும் மூடுதல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுதல் போன்ற அனைத்து செயல்களையும் சரியான நேரத்தில் செயல்படுத்தினோம்.

இது மட்டுமல்லாமல் மக்களின் ஒத்துழைப்பும் இருந்ததால் நாங்கள் இதை சாதித்து உள்ளோம். மேலும் விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் சரியாக சென்றது. அதனால்தான் இன்று பக்கத்தில் உள்ள அனைத்து நகரங்களையும் விட மொன்றியல் மூன்றாவது கொரோனாவை எதிர்கொண்டு வெற்றியைப் பெற்றுள்ளது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |