50 வயதுக்கு மேற்பட்டவர் அனைவருக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கிலாந்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. இதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு உலக நாடுகள் அனைத்தும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரித்தானியாவில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு முன்னரே புற்றுநோயின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
அதன் விளைவாக 50 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ்ஸை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி க்ரிஷ் விட்டி தலைமையில் இரண்டு வகையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் முதல் வகை சோதனையில் உருமாறிய கொரோனா கட்டுப்படுத்துவதற்கு புதிய தடுப்பூசியை கண்டுபிடித்து வருகின்றனர்.
மேலும் இரண்டாவது வகை சோதனையில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் ஃபைசர்-பயோஎன்டெக், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா அல்லது மாடர்னா தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இங்கிலாந்தில் 67 மில்லியன் மக்கள் தொகை உள்ளது. இதில் 34.6 மில்லியனுக்கு அதிகமான மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.