Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. 3 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

காவல்துறையினர் 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் யாசர் அராபத் என்பவர் வசித்து வருகிறார். இவரும் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வசிக்கும் அனிபா மரைக்காயர் என்பவரும் கஞ்சா விற்பனை செய்ததாக தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்தனர். இதேபோன்று தருவைகுளம் பகுதியில் வசிக்கும் மணி என்பவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணியை கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

இந்நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் யாசர் அராபத், ஹனிபா மரைக்காயர் மற்றும் மணி ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Categories

Tech |