Categories
தேசிய செய்திகள்

மேம்பாலம் இடிந்து 3 பேர் பலி…! படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு..!!

மும்பையில் நடைபாதை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மும்பை மாநிலம் அந்தேரி கிழக்கு -மேற்கு ரயில் நிலையங்களை இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது. இந்நிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே ஏற்பட்டிருக்கும் கோர விபத்து நடைபாதை மக்களிடையே பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் கூறுகையில் நடைமேம்பாலம் சத்திரபதி சிவாஜி நிலையத்தின் .பிளாட்பாரத்தில் பி.டி. லேன் அமைந்திருக்கும் பகுதியுடன் இணைகிறது. அந்த நடைபால மேம்பாலத்தில் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக  தெரிவித்தனர்.

இந்த துயரச் சம்பவம் குறித்து போக்குவரத்து இணை கமிஷனர் மகேஷ்குமார் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்கு ஆம்புலன்சில் வந்து செல்லும் வகையில் ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிவித்தார்.  நிலைமை கட்டுக்குள் கொண்டு வரும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Categories

Tech |