அமெரிக்காவில் பிறந்து மூன்று மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையை வாகனம் ஏற்றி கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின், நியூயார்க் மாகாணத்தின் புரூக்ளின், கிளிண்டன் ஹில் என்ற பகுதியில் இருக்கும் ஒரு சாலையின் ஓரத்தில், ஒரு தாய், stroller வண்டியில் தன் குழந்தையை வைத்துத் தள்ளி சென்றிருக்கிறார். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி, கருப்பு நிற வாகனம் ஒன்று அதிவேகத்தில் வந்திருக்கிறது.
அந்த சமயத்தில், திடீரென்று அந்த வாகனம், சாலையோரத்தில் சென்றிக்கொண்டிருந்த அந்தத் தாய் மற்றும் குழந்தை மீது மோதிவிட்டது. இக்கொடூர விபத்தில் அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலியானது. குழந்தையின் தாய் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
விபத்திற்கு காரணமான அந்த நபர், அங்கிருந்து தப்பிக்க முயற்சித்திருக்கிறார். அப்போது, அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவரை வழிமறித்து பிடித்துவிட்டார்கள். அந்த நபர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த நபரின் பெயர் Tyrik Mott என்று தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். ஆனால் அவரின் தாயார், தன் மகன் நல்லவன் என்றும், மகனை விடுவிக்குமாறும் கோரியிருக்கிறார். மேலும் இதற்கு முன்பாக, அவர் மீது எந்த வழக்குகளும் இல்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.