Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் காணாமல் போன 3மாத குழந்தை… அம்பத்தூரில் மீட்ட போலீஸ்… துரித நடவடிக்கைக்கு குவியும் பாராட்டுக்கள் …!!

சென்னை கோயம்பேடு சந்தை பகுதியில் கடத்தப்பட்ட 3 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு இருக்கிறது.

சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் ரமேஷ். இவர், இவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கோயம்பேடு பழ மார்க்கெட் பகுதியில் தங்கி வந்துள்ளார். நேற்று அதிகாலையில் தன்னுடன் உறங்கிக் கொண்டிருந்த 3 மாத பெண் குழந்தை சஞ்சனாவை காணவில்லை என்று குழந்தையின் தந்தை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் 20க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்தார்கள். அதில் ஒருவர் குழந்தையை தூக்கி செல்லக்கூடிய காட்சிகள் பதிவாகி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தார்கள்.

கோயம்பேடு பழ மார்க்கெட்டில் 3 மாத கைகுழந்தை கடத்தல்: அலட்சியம் காட்டிய  எஸ்.ஐக்கு துணை ஆணையர் மெமோ | 3-month-old baby abducted at koyambedu fruit  market: Deputy ...

பின்னர் 4 தனிப்படைகள் அமைத்து கோயம்பேடு காவல் ஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதே போல சென்னையில் இருக்கக்கூடிய அனைத்து காவல் நிலையத்திற்கும் இந்த குழந்தையின் புகைப்படத்தை அனுப்பி இருந்தார்கள். இந்த குழந்தை தொடர்பான விவரங்கள் தெரிந்தால் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள பிளாட்பார்மில் இந்த குழந்தை இருப்பது அங்கு இருக்கக்கூடிய போலீசாருக்கு தெரிய வந்திருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரிந்திருக்கிறது.

இதையயடுத்து உடனடியாக அம்பத்தூர் தொழிற் பேட்டை போலீசார் அந்த குழந்தையை மீட்டார்கள். அதன் தொடர்ச்சியாக கோயம்பேடு காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார்கள். குழந்தையை பத்திரமாக மீட்கப்பட்டு குழந்தை பெற்றோரிடம் ஒப்படைகப்பட்டுள்ளது. காலையில் காணாமல் போன குழந்தை போலீசின் துரித நடவடிக்கையால் கண்டுபிடிக்கப்பட்டதால் பலரும் போலீசாரை பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |