சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மூன்று மாத கைக்குழந்தை கடத்தப்பட்டு இருக்கிறது.
கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருபவர் ரமேஷ். இவர் விழுப்புரத்தை சேர்ந்தவர். இவரும் இவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கோயம்பேடு பழ மார்க்கெட் பகுதியிலேயே தங்கி இருக்கிறார்கள். இன்று அதிகாலையில் இவருடைய கைக்குழந்தையை அடையாளம் தெரியாத மூன்று பேர் கடத்தி சென்றதாக காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
இன்று அதிகாலை இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தந்தை ரமேஷ் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் முதற்கட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறை உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்று சொல்லப்படுகின்றது. இதையடுத்து அண்ணாநகர் துணை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சரியாக விசாரணை நடத்தாத அதிகாரியிடம் விளக்கம் கேட்டு மேமோ கொடுத்திருக்கிறார்.
முதல் கட்டமாக தற்போது கோயம்பேடு காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 20க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை தற்போது காவல் துறையினர் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் அந்த குழந்தையை கடத்திச் சென்றிருக்கலாம் என்று சிசிடிவி காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்த பட்டு இருக்கிறது. இன்று அதிகாலையில் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்த சந்தேகப்பட கூடிய மூன்று நபர்கள் யார் என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள்.