Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்…. விபத்தில் பலி…. அதிகாலையில் சோகம்…!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அதிகாலையில் விபத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே விருத்தாசலம் செல்லும் சாலையில் கார் ஒன்று அதிகாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அங்கு இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த பிரியா(43) அவருடைய மகன் அபிஷேக்(16) ஆகிய இருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இதையடுத்து பிரியாவின் கணவர் சௌந்தர்ராஜன் மற்றும் மகள் ஈஸ்வந்தினி(18) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சௌந்தர்ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |