Categories
தேசிய செய்திகள்

3 குழந்தைகளின் தாய் மின் ஆட்டோ ஓட்டுனரானது எப்படி?… மெய்சிலிர‌‌ வைக்கும் பின்னணி….!!!

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் சீமாதேவி(40) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதில் மகனும், 14 மற்றும் 12 வயதில் 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் மூவரும் கல்வி பயின்று வருகின்றனர். பிள்ளைகளின் கல்வி செலவு, குடும்ப நலத்திற்கு போதிய வருமானம் இல்லாமல் சீமா சீரமத்தில் இருந்து வந்தார். அப்போது தனது குழந்தைகளின் படிப்பிற்காகவும், கணவருக்கு உதவியாக இருப்பதற்காக சீமாதேவி பல்வேறு இடங்களில் வேலை தேடி உள்ளார். வேலை கிடைக்கவில்லை என்றாலும் அவர் சோர்வடையாமல், விடா முயற்சியாக வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் நாம் ஏன் வேலை தேட வேண்டும் நாமே ஒரு வேலை உருவாக்குவோம் என முடிவெடுத்த சீமா கணவரிடம் ஆலோசித்து மின் ஆட்டோ வாங்கி ஓட்டுவது என முடிவு செய்தனர். அதன் பிறகு ஒரு மின் ஆட்டோவை வாங்கி கடந்த நான்கு மாதங்களாக ஆட்டோ ஓட்டி கணவருக்கும் ஆதரவாகவும் உதவியாக குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இது குறித்து சீமாதேவி கூறியது, குடும்பச் செலவு, குழந்தைகளின் கல்விச் செலவு என குடும்பத்திற்கு பணத்தை அதிகமாக இருந்ததால் எனது கணவரின் வருமான போதாது நிலையில் கணவருக்கு உதவியாக இருக்க விரும்பினேன். ஆனால் குடும்பத்தை நடத்துவதற்கு வேறு வேலை எதுவும் கிடைக்காமல் சோர்ந்திருந்த நிலையில், பெண்களால் ரயில், விமானங்கள் ஓட்ட முடியும் போது ஏன் நம்ம ஒரு மின் ஆட்டோவை வாங்கி ஓட்ட கூடாதா? என்ற கேள்வி என்னை தட்டி எழுப்பியது. இதனையடுத்து நாம் ஒரு மின் ஆட்டோ வாங்கி ஓட்டலாம் என நானும் என் கணவரும் முடிவு செய்தோம். அதன் பிறகு ரூ.30000 கடன் வாங்கி மாதம் ரூ.3000 மாத தவணையில் மின் ஆட்டோ ஒன்றை வாங்கியுள்ளோம். எனது கணவர் எனக்கு மின் ஆட்டோ ஓட்டுவதற்கு கற்றுக் கொடுத்தார். நான் அதை விரைவாக கற்றுக்கொண்டேன். அதன் பிறகு கடந்த நான்கு மாதங்களாக நக்ரோடா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆட்டோவை ஓட்டி கண்ணியமான வாழ்க்கையும் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியும் வழங்கி வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |