Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை அடிச்சுக்க யாருமில்லை…. கெத்து காட்டிய ரயில்வே துறை …!!

நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து சுமார் மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை புரிந்துள்ளது. 

தென் கிழக்கு மத்திய ரயில்வேயின் நாக்பூர் கோட்டத்தில் நிலக்கரி இரும்புத்தாது ஏற்றிச் செல்ல பயன்படும் சரக்கு பெட்டிகளை கொண்ட நான்கு ரயில்களை ஒன்றாக இணைத்து, மூன்று கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயிலை உருவாக்கினர். நான்கு ஜோடி மின்சார எஞ்சின்கள், 4 காட்வேன் ஆகியவற்றைக் கொண்ட இந்த ரெயிலில் 251 காலி சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன.

ஷாஸ்நாட் என பெயரிடப்பட்ட இந்த நீளமான ரயிலை தென் கிழக்கு மத்திய இரயில்வே இயக்கி சாதனை படைத்தது. இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்திய ரயில்வேயின் இந்த சாதனை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் அதிக அளவிலான சரக்குகளை கொண்டு செல்ல வழிவகை செய்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |