இன்றைய சமூகத்தில் மது பழக்கத்தினால் பலரும் அடிமையாகி வருகின்றனர்.. சிலர் பள்ளி படிக்கும் பொழுது அதன் பழக்கத்துக்கு ஆளாகி விடுகின்றனர்.. இந்த மது பழக்கத்தினால் பலரது குடும்ப வாழ்க்கையும் சீரழிகிறது.. அதே நேரத்தில் குடித்து குடித்து நுரையீரல் பாதித்து உயிரிழப்பும் ஏற்படுகிறது..
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் குப்பை கிடங்கில் வீசி செல்லப்பட்ட காலாவதியான மதுபாட்டில்களை மது பிரியர்கள் உற்சாகமாக எடுத்து குடித்துள்ளனர்.. இதில் விஜய், ஜிகோ, விஜோ ஆகிய 3 துப்புரவு தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..