மறைந்த விவேக்கின் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். சமீபத்தில் நிகழ்ந்த இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தாராள பிரபு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.தற்போது விவேக் நம்முடன் இல்லாமல் இருந்தாலும் இவர் நடிப்பில் 3 படங்கள் உருவாகியுள்ளது.
அதன்படி முன்னணி நடிகர் விஜய் சேதுபதியுடன் விவேக் முதல் முறையாக இணைந்து ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் லெஜெண்ட் சரவணா ஹீரோவாக அறிமுகமாகி உள்ள படத்தில் விவேக் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன்2 படத்திலும் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் தற்போது சில காரணங்களால் இந்தியன்2 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் விவேக் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது மூன்று படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது.