பிலிப்பைன்ஸ் நாட்டின் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்த போது திடீரென்று ஒரு நபர் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டமளிப்பு விழா நடந்தது. அப்போது, திடீரென்று அங்கிருந்த ஒரு நபர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார். இதில் மூன்று பேர் பரிதாபமாக பலியானார்கள்.
இந்த பயங்கர தாக்குதலில் மேலும் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நபர் இதற்கு முன்பு விசாரணை கைதியாக காவலில் வைக்கப்பட்டிருந்தவர் என்று தெரிய வந்திருக்கிறது. காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.