சென்னையில் சமீபத்தில் சலூன் கடையில் முடி வெட்டிய 3 இளைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அது சிவப்பு மண்டலமாக அறிவிக்கபட்டதுடன், பல்வேறு மண்டலங்கள் கடும் பாதுகாப்புடன் கவனிக்கப்பட்டு வருகின்றன. சென்னை நகரில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. அதில்,
ஓரிரு மண்டலங்களை தவிர அனைத்து மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்பு என்பது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் அப்பகுதியில் காவல்துறையினரும், சுகாதாரத் துறையினரும் கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் வருகிறது.
இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் சலூன் கடை ஒன்றில் முடிவெட்டிய 3 இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று இளைஞர்களும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நெற்குன்றத்தில் சலூன் கடை உரிமையாளர் ஒருவர் மூலம் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.