Categories
உலக செய்திகள்

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்….. 3 பிஞ்சுகளையும் விட்டுவைக்காத கொரோனா….!!

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது சுகாதார அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது

உலக நாடுகளிடையே பரவும் கொரோனா தொற்றால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கும் கொடிய நோயான கொரோனா தொற்று புதிதாய் பிறந்த பச்சிளம் குழந்தைகளையும் விட்டுவிடவில்லை. மெக்சிகோ நாட்டில் ஒரு பெண்ணிற்கு மூன்று குழந்தைகள் ஒரே பிரசவத்தில் அடுத்தடுத்து பிறந்துள்ளன. இதனால் தாயும் தந்தையும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர் ஆனால் அவர்களது சந்தோஷம் வெகுவிரைவில் பறிபோனது. பிறந்த மூன்று குழந்தைகளுக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் இதுவரை இப்படி நடந்ததாக தகவல்கள் இல்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம்  புரியாத புதிராகவே இருக்கின்றது. பிறந்த குழந்தைகளுக்கு பொதுவாகவே அதேநாளில் தொற்று ஏற்படுவது இல்லை. ஒருவேளை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையை தொட்டால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இந்த மூன்று குழந்தைகளையும் யாரும் நெருங்கவில்லை. 17 ஆம் தேதி பிறந்த 2 ஆன் குழந்தை 1 பெண் குழந்தை என 3 குழந்தைகளுக்கும் சிகிச்சை கொடுத்துவரும் நிலையில் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உடல்நிலை தேறி வருகின்றது.

மற்றொரு ஆண் குழந்தை சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தாயின் கருப்பையில் இருந்த பொழுது நஞ்சுக் கொடி மூலமாக தொற்று பரவியிருக்க கூடுமா என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இதுகுறித்து சுகாதார கமிஷன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கும் கொரோனா உறுதிப்படுத்துவது இதுவரை கண்டறியப்படாத ஒன்று. எனவே தீவிரமாக விசாரித்து வருகிறோம்” என கூறினார். பிறந்த பிறகு குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதை பார்க்கலாம் என நம்பப்படுகின்றது.

ஆனால் மூன்று குழந்தைகளுக்கும் தொற்று ஏற்பட்டு இருப்பது அதிசயமாகவே உள்ளதாக சுகாதார அதிகாரிகள் வியப்புடன் தெரிவித்துள்ளனர். சுகாதார மந்திரி மோனிகா லிலியான ரேஞ்ச் கூறுகையில் “குழந்தைகள் பிறந்த நேரத்தில் தொற்று ஏற்பட்டு இருப்பதற்கான சாத்தியம் இல்லை” என தெரிவித்துள்ளார் குழந்தைகளின் தாய் தந்தைக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக மருத்துவ அதிகாரிகள் சமீபத்தில் நஞ்சுக்கொடி மூலம் பிறந்த குழந்தைக்கு தொற்று ஏற்படுவதை கண்டறிந்து கூறியிருந்தார்கள்.

அதனால் அதேநேரம் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படாது என்றும் கூறியுள்ளனர். ஆனால் இதுவரை கொரோனா தொற்று கருச்சிதைவை ஏற்படுத்தும் என்பதற்கும், கருவில் வளர்கின்ற போது பாதிக்கும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என மருத்துவ விஞ்ஞானிகள் சொல்கின்றனர். 3 குழந்தைகள் நலம் பெற்று அவர்களது வாழ்க்கையை நல்ல முறையில் வாழ வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மனித குலத்தின் பிரார்த்தனையாக இருந்து வருகின்றது.

Categories

Tech |