Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3 வருசமா செய்யுறோம்… ஆடு திருடிய நடிகர்கள்… அதிர வைத்த வாக்குமூலம் …!!

சென்னையில் ஆடு திருடிய நடிகர்கள் 2பேர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருக்கும் மாதவரம் பால் பண்ணை அடுத்துள்ள மஞ்சம்பாக்கம் பகுதியில் நேற்று மினி வேன் மூலம் வந்த இருவர் அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை திருடினார். இதைப்பார்த்த ஆட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து மாதாவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் ஆடு திருடிய வழக்கு தொடர்பாக விசாரித்து வந்தார். பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் ஆடு திருடிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் பல அதிர்ச்சிகரமான தகவல் வந்துள்ளன. சென்னை புதுப்பேட்டை ஆண்டியப்பன் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் சினிமா பட தயாரிப்பாளர் விஜய சங்கர். இவரது மகன்கள் இரண்டு பேரும் தான் ஆடை திருடி விற்பனை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சகோதரர்களான நிரஞ்சன் குமார், லெனின் குமார் இவர்கள் இருவரும் தற்போது நீதான் ராஜா என்ற படத்தில் நடித்து வருகின்றனர். போலீஸ் அவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தில், நாங்கள் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு பட வாய்ப்புக்காக தேடி அலைந்தோம். எந்த ஒரு பட வாய்ப்பும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் பல இடங்களுக்கு வாய்ப்பை தேடி அலைந்து கொண்டிருக்கும் போதுதான் கிராமப்புறங்களில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை திருடி விற்று பெரம்பலூர் பகுதியில் கொண்டு விற்பனை செய்து அதில் கிடைக்கின்ற பணத்தை தந்தையிடம் கொடுத்து படம் எடுக்க முடிவு செய்தோம்.

அதன்படி தற்போது நடித்து வருகின்ற படத்திற்கு நீதான் ராஜா என்ற பெயர் சூட்டி தற்போது படப்பிடிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.  ஆடுகளை திருட வேண்டும் என்பதற்காக சொந்தமாக மினி வேனை வாங்கினோம். கடந்த மூன்று ஆண்டுகளாகவே ஆடு திருடும் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றோம் என போலீசாரிடம் அவர்கள் இருவரும் தெரிவித்தனர்.

Categories

Tech |