சீன கம்யூனர்ஸ் கட்சியின் தேசிய மாநாடு 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் அவரே அதிபராக இருப்பார். இதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16ஆம் தேதி நடைபெற்றுள்ளது இதில் ஜின்பின் 3வது முறை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜின்பிங்கிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷரீப் வாழ்த்து கூறியுள்ளார். ஒட்டுமொத்த பாகிஸ்தான் தேசத்தின் சார்பாக அதிபர் ஜி ஜென்பிற்கு எனது வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். மேலும் இது அவரது சாமர்த்தியுமான பணி திறனுக்கும் சீன மக்களுக்கு சேவையாற்றுவதில் அவரது அசைக்க முடியாத பக்திக்கும் கிடைத்த ஒரு பிரகாசமான கௌரவம் என அவர் கூறியுள்ளார். அதேபோல் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது சீன அதிபர் ஜின்பிங் பாகிஸ்தானின் உண்மையான நண்பர் என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.