தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா 3ஆம் அறையை எதிர்கொள்ள முன்மாதிரியாக பைலட் புராஜகட் ஒன்றை உருவாக்க உள்ளதாகவும் தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட பகுதிகள், இளைஞர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட விபரங்களை மத்திய அரசு வழங்கினால் மட்டுமே மூன்றாவது அலையை எளிதில் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.