Categories
தேசிய செய்திகள்

3 லட்சம் மாத்திரைகள்… 10 ஆயிரம் முக கவசங்கள்… சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம்…!!!

சாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10000 முகக் கவசங்கள், 2000 சனிடைசர் பாட்டில்கள் மற்றும் உணவு தானியங்கள், பழங்கள் இதர உணவு பொருட்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.

கர்நாடகாவில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெங்களூரு ஜே.பி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட செய்ய வேண்டும். மூன்றாம் அலை உருவாகாமல் இருக்க வேண்டி சாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10,000 முகக் கவசங்கள், 2000 சனிடைசர் பாட்டில்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில் கடந்த 4 நாட்களாக சாய்பாபாவுக்கு எந்த விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்று சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடத்தப்பட்டது. இதில் பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |