Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

3 மாத கர்ப்பிணி பெண் இப்படி பண்ணிருக்காங்க…. அதிர்ச்சியடைந்த கணவர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

காஞ்சிபுரத்தில் கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் அதியமான் நகரில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சரண்யாவிற்கும், அன்பழகனிற்க்கும் 5 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது சரண்யா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனையடுத்து தம்பதியர் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனமுடைந்த சரண்யா தூக்கிப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |