மதுரையில் கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பரவை நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார் . இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த கிருபாராணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது . இதைத்தொடர்ந்து தற்போது கிருபா ராணி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார் . இந்நிலையில் கிருபாவிற்கும் செந்தில்குமாருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டிருக்கிறது .
இதனால் மிகவும் மன உளைச்சலடைந்த கிருபா நேற்று முன்தினம் மண்ணெண்னையை தனது உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துள்ளார் . இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்கள் கிருபாவை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் . இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தின் மேல் விசாரணையை ஆர்டிஓ நடத்துகிறது.