இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த டிஆர்டிஓ சார்பில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் அலைகள் அமைப்பதாக திரு. ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்நிலையில் ஆக்சிஜன் இல்லாமல் பலரும் உயிரிழந்து வருகின்றனர். இதனையடுத்து மத்திய ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஆர்டிஓ என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மூலம் 500 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகளை 3 மாதங்களில் அமைக்கப்படும் என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தேஜாஸ் இலகு ரக போர் விமானத்தில் டிஆர்டிஓ அமைத்துள்ள மருத்துவ ஆக்சிஜன் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் பெங்களூரில் உள்ள டாட்டா அட்வான்ஸ் சிஸ்டம் லிமிடெட் நிறுவனமும், கோயமுத்தூரில் உள்ள ரைடன்ட் நியூமேட்டிக்ஸ் நிறுவனமான எம்.ஒ.பி. தொழில்நுட்பம் இணைந்து நாடு முழுவதும் 350 ஆக்சிஜன் அலைகளை மருத்துவமனையில் அமைக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலிய நிறுவனத்துடன் உத்தரகாண்ட் மாநிலம் இணைந்து நிமிடத்திற்கு தலா 500 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய 120 ஆலைகளை அமைக்கவும் முடிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்காது எனபிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.