Categories
மாநில செய்திகள்

3 மாதங்களுக்குள் மேல் பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுமா…..? அரசின் விளக்கம் இதோ….!!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்த பொருட்கள் பெற வேண்டுமென்றால் அதற்கு குடும்ப அட்டையானது மிகவும் அவசியம். அதன்பிறகு ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்களை சிலர் கள்ளச் சந்தையில் விற்பதாகவும், ரேஷன் கார்டுகளை தவறாக பயன்படுத்துவதாகவும் புகார்கள் வந்தது.

இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் தகுதியில்லாத நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுடைய ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை தகு 4.74 கோடி தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து தகுதி இல்லாத நபர்கள் வைத்திருக்கும் ரேஷன் கார்டுகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருவதால், தகுதி இல்லாதவர்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்தும் வருகிறார்கள்.

இதனையடுத்து 3 மாதங்களுக்கு மேல் நியாயவிலை கடைகளில் பொருட்கள் வாங்காமல் இருந்தால் அவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று தகவல்கள் வெளியானது. இதன் காரணமாக தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு விடுமோ என்ற அச்சம் பலர் மத்தியில் நிலவியது.‌ ஆனால் தற்போது தமிழக அரசு ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட மாட்டாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் இந்த அறிவிப்பால் 3 மாதங்களுக்கு மேல் பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட மாட்டாது என்பது தெளிவாகியுள்ளது.

Categories

Tech |