கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனையடுத்து அந்தந்த நாடுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் சீனாவை ஆட்டி படைத்து வரும் BF 7 என்ற புதிய ஓமைக்ரான் கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் ஒரு பகுதியில் 3 பேருக்குமேல் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்குமே பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.