ஈரோடு மாவட்டத்திலுள்ள கோட்டு புள்ளம்பாளையம் காமராஜர் நகரில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கிருஷ்ணா(27) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தனுஷா(6), ஹரிஷா(4), அபி(2) என்ற மூன்று பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட கிருஷ்ணா தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த சதீஷ்குமார் தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கிருஷ்ணாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு கிருஷ்ணாவை பரிசோதனை செய்து டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.